இந்திய குடியரசு தின விழா – பஹ்ரைன்

இந்தியாவின் 69வது குடியரசு தினத்தை முன்னிட்டு பஹ்ரைன் சீப் பகுதியில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தில் குடியரசு தின விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல இந்திய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இவ்விழாவில் பஹ்ரைனுக்கான இந்திய தூதர் ஆலோக் குமார் சின்ஹா தேசிய கொடியேற்றினார்.

இந்தியாவின் அனைத்து மாநில அமைப்புகளின் பிரதிநிதிகள், பஹ்ரைன் வாழ் இந்தியர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு தேச பக்தி பாடல்களை பாடி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர். பல்வேறு கலை நிகழ்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here