இந்தியன் நேவியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு..!!

இந்தியன் நேவியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேவியில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். இந்தியன் நேவியில் வேலை வாய்ப்பு அறிவிக்கையில் மொத்தப் பணியிடங்களின் எண்ணிக்கை அறிவிக்கப்படவில்லை. ஆகையால் இது நல்ல வாய்ப்பு அதிகபட்ச எண்ணிக்கையில் காலியிடம் நிரப்பபடலாம்.

இந்தியன் நேவியில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க எந்த வித விண்ணப்ப கட்டணமும் செலுத்த அவசியமில்லை. இந்தியன் நேவியில் வேலை வாய்ப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பணியிடம் கேரளாவில் அமையும். விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்கள் 2.1.1999 ஆம் ஆண்டிற்கும் 1.7.2001க்குள் பிறந்திருக்க வேண்டும். திருமணமாகாதவர்கள் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பணியிடங்கள் கேடட், 10 மற்றும் பிளஸ் 2 , பிடெக் கேடட் என்ட்ரி கோர்ஸ் ஜூலை 2018 இல் தொடங்கும். விண்ணப்பதாரர்கள் விதிமுறையின்படி சம்பளம் பெறலாம். விண்ணப்பதாரர்கள் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் அறிவியல் பாடங்களான பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, மேத்தமெடிக்ஸ், ஆங்கிலத்தில் 50% சதவிகித மதிபெண்கள் பெற்று தேர்ச்சியுடன் அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் ஜேஇஇ மெயின்ஸ் தேர்வு எழுதியிருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் எஸ்எஸ்பி இண்டர்வியூ மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அத்துடன் ஜேஇஇ மெயின்ஸ் தேர்வை பொருத்து எஸ்எஸ்பி தேர்வு இருக்கும். அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேவையான தகவல்களை பெறலாம். விருப்பமும் தகுதியும் உடையோர் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here