இடுக்கியில் பூத்துக் குலுங்கும் பட்டடி மலர்..!!

சங்ககால தமிழ் இலக்கியங்களான புறநானூறு, அகநானூறு உள்ளிட்டவைகளில் ‘பட்டடி’ எனும் செந்நிற மலர்கள் இடம் பெற்றுள்ளன. ‘ஸ்பாத்தோடியா கம்முலேட்டா’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட இந்த மரங்கள் பிறப்பால் ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்தவை என்றும் தாவரவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதனாலேயே ‘ஆப்ரிக்கன் துலிப்’ என்றும் இந்த மரங்களுக்கு பெயர் உண்டு. இந்த ‘பட்டடி’ மரங்கள் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி, தேக்கடி ஒட்டிய பகுதிகளில் அதிகம் உள்ளன. கடந்த செப்டம்பர் மாதம் பெய்த தென்மேற்கு பருவ மழையால், இந்த ‘பட்டடி’ மரங்கள் அனைத்தும் தற்போது பூத்து குலுங்க ஆரம்பித்துள்ளன. பட்டடி மலர்களைக் காண்பதற்காக அப்பகுதியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here