ஆஸ்திரேலிய தேசிய பாடத்திட்டத்தில் தமிழ்மொழியை சேர்க்க மெக்டெர்மாட் கோரிக்கை !!

ஆஸ்திரேலியாவின் தேசிய கல்வித் திட்டத்தில் தமிழ் மொழியை ஒரு பாடமாக இணைத்துக் கொள்ள வேண்டும் என ப்ராஸ்பெக்ட் (Prospect) தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹூ மெக்டெர்மாட் (Hugh Mcdermott) கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நியூ சவுத் வெல்ஸ் பாராளுமன்றத்தில் பேசும் போது, உலகின் தொன்மையான மொழிகளுள் தமிழ் மொழியும் ஒன்று. தமிழ் கல்வியும், கலாசாரமும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு மட்டுமன்றி தெற்காசிய நாடுகளுக்கு மிகவும் அவசியம். உலகம் முழுவதும் சுமார் 70 மில்லியன் மக்கள் தமிழ் மொழி பேசுகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு ஆஸ்திரேலிய அரசு தமிழ்மொழியை தேசிய பாடத்தித்தில் சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், தமிழ் மொழி கல்விக்கான முதலீட்டை அதிகரிக்க வேண்டும் அவர் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here