ஆன்லைன் ரம்மி சீட்டாட்டத்திற்கு தெலங்கானா அரசு தடை விதித்தது

ஐதராபாத்: இன்றைய நடைமுறையில் நாள்தோறும் இளைஞர்கள் ஆன்லைன் ரம்மி சீட்டாட்டத்தில் அதிக அளவில் தங்களது நேரத்தைச் செலவிடுவதால் தெலங்கானா அரசு தடை விதித்துள்ளது.

தெலங்கானாவில் ஆன்லைன் ரம்மி சீட்டாட்டம் மிகவும் பிரபலமானது. இந்த விளையாட்டில் ஈடுபடுவோர் நாள் முழுவதும் அதில் மூழ்கிப்போய் இருப்பதாக தெலங்கானா அரசுக்கு புகார்கள் வந்தன. அதிலும் குறிப்பாக இளைஞர்கள் இதில் ஒன்றிப்போய் தங்கள் குடும்பத்தை கவனிக்காமல் விட்டுவிடுவதாகவும் புகார் எழுந்தன.

இதையடுத்து புதிய அரசாணை மூலம் ஆன்லைன் ரம்மி சீட்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த அரசாணையில் கூறியிருப்பதாவது, “சமூகத்தை அழிக்கும் வகையில் செயல்படும் ஆன்லைன் ரம்மி சீட்டாட்டம் புதிய சட்டம் மூலம் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே அந்த விளையாட்டை இனிமேல் விளையாடுவது குற்றம். இந்த விளையாட்டு எந்த ரூபத்தில் விளையாடினாலும் தண்டிக்கப்படுவார்கள்”. இவ்வாறு அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here