ஆகஸ்ட் 4 ம் தேதி பஹ்ரைன் இரத்ததான முகாம்

பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் மற்றும் சல்மானியா மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் ஆகஸ்ட் மாதம் 4 ம் தேதி சல்மானியா இரத்த வங்கியில் நடக்கவிருக்கிறது.

சுமார் 500 தமிழர்கள் கலந்துகொள்ளவிருக்கும் இம்முகாமிற்கு சங்க சமூகநலத்துறை ஏற்பாடு செய்துள்ளது. சமூகநலத்துறை செயலாளர் தூத்துக்குடியை சேர்ந்த செந்தில், “கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இவ்வாண்டு வெப்பம் அதிகமாக இருந்தாலும் தமிழர்கள் ஆர்வத்துடன் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்று கூறினார்.

உறுப்பினர்கள் நலத்துறை செயலாளர் தஞ்சையை சேர்ந்த பஞ்சு இராஜ்குமார், “கலந்து கொள்ளும் அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார். பொருளாளர் மதிவாணன், ஊடகத்துறை செயலாளர் கார்த்திக், விளையாட்டுத்துறை செயலாளர் முகமது பைசல், வளர்ச்சித்துறை செயலாளர் நித்தியானந்தன், இலக்கியத்துறை செயலாளர் சுரேஷ், வேலை வாய்ப்புத்துறை செயலாளர் முகமது அபுசாலி ஆகியோர் உடனிருப்பர்.

மேலும் விவரங்களுக்கு 39180423, 36398487, 32396434, 38872643, 33678877 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here