அரோராவில் “சிவோகம்” நடன நிகழ்ச்சி

அமெரிக்காவின் அரோரா ஸ்ரீ வெங்கடேஷ்வர சுவாமி திருக்கோயிலில் மகாசிவராத்திரி விழாவின் ஒரு பகுதியாக “சிவோகம்” என்ற தலைப்பில் கலாச்சார இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பல்வேறு குழுக்களை சேர்ந்தவர்கள் சிவனை போற்றும் வகையிலான பாடல்களை பாடினர்.

தொடர்ந்து சிவபுராண நாட்டிய நாடகம், பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அமெரிக்க நடனப்பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் விழாவில் பங்கேற்று, தங்கள் முகபாவங்களால் அனைவரையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தினர். இவ்விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தங்களின் நடன திறமைகளை காட்டிய அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here