அரசுப் பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கிய பெற்றோர்கள்..!!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே அரசு பள்ளிக்கு தேவையான பொருட்களை கிராம மக்கள் மேளதாளத்துடன் சீர்வரிசையாக எடுத்து வந்தனர். அரசகுலம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியம் நடுநிலைப்பள்ளியில் இன்று “கல்விச்சீர் திருவிழா” கொண்டாடப்பட்டது. இதையொட்டி பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கு சீர் கொண்டுவந்தனர்.

பள்ளிக்கு தேவையான எழுதுபொருட்கள், குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரம், மின்விசிறி, குப்பைத்தொட்டி, சுவர் கடிகாரம், மரக்கன்றுகள் உள்ளிட்டவற்றை மேளதாளங்கள் முழங்க அவர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இவற்றை சீர்வரிசையாக அளிப்பதாக கிராம மக்கள் கூறினர்.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here