அமெரிக்காவில் பதவி பெறும் இந்திய கல்வியாளர்

இந்தியாவைச் சேர்ந்த கல்வியாளர், பிரஜாபதி திரிவேதி, 64, ‘நாபா’ எனப்படும், அமெரிக்காவின் கவுரவமிக்க அமைப்புகளில் ஒன்றான, தேசிய பொது நிர்வாக மைய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ‘நாபா’ மையம் 1967ல், அமெரிக்க பார்லிமென்டால் உருவாக்கப்பட்ட லாபம் கருதாத, பொது அமைப்பு.

இது வெளிப்படையான திறன் மற்றும் பொறுப்புமிக்க அமைப்புகளை உருவாக்குவதில், அரசுக்கு ஆலோசனை அளிக்கும். கவுரவமிக்க அமைப்புகளில் ஒன்றான, ‘நாபா’வின் உறுப்பினராக, இந்தியாவைச் சேர்ந்த கல்வியாளர், பிரஜாபதி திரிவேதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்; இவர் ஐ.எஸ்.பி., எனப்படும் இந்திய வர்த்தக பள்ளியில், பேராசிரியராக பணியாற்றுகிறார். மேலும் இவர் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அரசு வர்த்தகத்துக்கான ஐ.பி.எம். மையத்தில் சிறப்பு பேராசிரியராக செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here