அமெரிக்காவில் சின்மயா மேளா

நியூஜெர்சி: அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி நகரில் சின்மயா மேளா மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில் இந்தியாவில் உள்ள கோயில்கள் பற்றிய தலைப்பில் இயல், இசை, நாடகம் மற்றும் கண்காட்சிகள் நடந்தது.

ஜெயஸ்ரீ வேதமூர்த்தி தலைமையில் மேடை ஏறிய குழந்தைகள் நாடகம், மீனாட்சி கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. குழந்தைகள் நிகழ்ச்சியில் சிறுமி மாயாவின் கண்ணன் பாட்டு எல்லாரையும் கவர்ந்தது. கண்காட்சி பிரிவில் ஸ்ரீரங்கம் கருடமண்டபத்தை தத்ரூபமாக வரைந்த சித்தார்த் என்ற மாணவனுக்கு முதல் பரிசு கிடைத்தது.

ஷாந்தி, சந்திரா, லக்ஷ்மி குழுவினரால் வடிவமைக்க பெற்ற கும்பகோணம் வரதராஜர் கோயில் மூன்றாம் இடத்தை பிடித்தது. நிறைவாக பெரியவர்கள் நடித்த அபிராமி அந்தாதி நாடகம் மக்கள் எல்லாரையும் கவர்ந்தது. அபிராமி பட்டராக நடித்த சூரி, மன்னனாக நடித்த சதீஷ், அபிராமியாக நடித்த ம்ரிதுலாவும் மிக பிரமாதமாக நடித்திருந்தனர்.

மாமியாக நடித்தது மட்டுமல்லாமல் அரங்க அமைப்புகளை தத்ரூபமாக ஏற்பாடு செய்த புஷ்பஜா திறமையை எல்லாரும் பாராட்டினர். அரங்குக்கு வேண்டிய ஒலி/ ஒளி தேவைகளை சின்மயா தரப்பில் செய்து கொடுத்த பூர்ணிமாவுக்கு கலைஞர்கள் நன்றி தெரிவித்தனர்.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here