அனுமதியின்றி மற்றவர்கள் புகைப்படத்தை பதிவிடுவதை தவிர்க்க பேஸ்புக்கில் புதிய வசதி அறிமுகம்..!!

இன்றைய நடைமுறையில் பேஸ்புக் என்பது நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் நன்கு அறியப்பட்ட ஒன்றாக உள்ளது. நண்பர்களின் புகைப்படங்கள் மற்றும் கருத்துக்களைக் காணவும், அவர்களுடன் உரையாடவும் இன்றியமையாத ஒன்றாக வலம் வருகிறது. இந்நிலையில் பேஸ்புக்கில் ஒருவரின் புகைப்படத்தை மற்றொரு நபர் வெளியிட்டால் சம்மந்தப்பட்ட நபருக்கு தெரியப்படுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஒருவரின் பேஸ்புக் ப்ரோபைல் பிக்சர் எனப்படும் சுயவிவர படங்களையும், மற்றவர்கள் பதிவேற்றம் செய்யும் புகைப்படங்களையும், முக அடையாளங்களைக் கண்டறியும் தொழில்நுட்பம் மூலம் அறிய முடியும் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் பேஸ்புக் பயனாளி ஒருவரின் புகைப்படத்தை, அனுமதியுடனோ அல்லது அனுமதியின்றியோ மற்றோரு நபர் பதிவிட்டால், குறிப்பிட்ட அந்த பயனாளிக்கு தெரிவிக்கப்படும். இந்த தொழில்நுட்பத்தால் ஒருவரின் தனிப்பட்ட புகைப்படங்களை அனுமதியின்றி மற்றவர்களால் பதிவிடுவதை தவிர்க்க முடியும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

பதில் அனுப்ப

Please enter your comment!
Please enter your name here